/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காவணிப்பாக்கம்- சாலை வசதி ஏற்படுத்த கோரிக்கை
/
காவணிப்பாக்கம்- சாலை வசதி ஏற்படுத்த கோரிக்கை
ADDED : நவ 24, 2024 07:46 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது காவணிப்பாக்கம் கிராமம். இக் கிராமத்தினர், தங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள கரும்பாக்கம் சென்று வர இதுவரை சாலை வசதி இல்லை.
இதனால் அப்பகுதியினர், கரும்பாக்கத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளை, வி.ஏ.ஒ., அலுவலகம் போன்ற இடங்களுக்கு சென்றுவர தனியார் நிலங்கள் வழியாக ஒத்தையடி பாதையில் சென்று வருகின்றனர்.
இதேபோல, கரும்பாக்கம் கிராமத்தினரும், காவணிப்பாக்கத்தில் உள்ள தங்களது உறவினர் வீடுகளுக்கும், வியாபார பணிகள் காரணமாகவும் சென்று வர தனியார் விவசாய நிலங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், கரும்பாக்கம்- - காவணிப்பாக்கம் இடையே, சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக அப்பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த இரு கிராமங்கள் இடையே, தனி நபர்களின் பட்டா நிலம் இருப்பதால் பாதை வசதி ஏற்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு கண்டு, கரும்பாக்கம்- - காவணிப்பாக்கம் இடையே சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என, இரண்டு கிராமத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.