/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறுநீரக பாதிப்பு வங்கப்புலி உயிரிழப்பு
/
சிறுநீரக பாதிப்பு வங்கப்புலி உயிரிழப்பு
ADDED : பிப் 21, 2024 11:02 PM

தாம்பரம்,:வண்டலுார் பூங்காவில், கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த,'விஜயன்' என்ற வங்கப் புலி நேற்று முன்தினம் இரவு இறந்தது.
வண்டலுார் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த விஜயன், 21, என்ற ஆண் வங்கப் புலி, ஜன., 24ம் தேதி முதல் உணவு உட்கொள்வதை குறைத்தது.
புலியின் ரத்தத்தை ஆய்வு செய்ததில், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலையின் ஆலோசனையுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும், வயிறு இறக்கம் ஏற்பட்டு சோர்வாக இருந்த வங்கப் புலிக்கு, பூங்கா மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு புலி உயிரிழந்தது. பின், புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.