/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மங்களகிரி வாகனத்தில் கூரத்தாழ்வான் வீதியுலா
/
மங்களகிரி வாகனத்தில் கூரத்தாழ்வான் வீதியுலா
ADDED : ஜன 26, 2024 12:37 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கூரம் கிராமத்தில், ஆதிகேசவ பெருமாள் மற்றும் கூரத்தாழ்வான் கோவில் உள்ளது. இக்கோவிலில், கூரத்தாழ்வானின் 1,014வது திருவவதார மஹோத்ஸவம் கடந்த 22ல் துவங்கியது.
தினமும் காலையில் பல்லக்கிலும், இரவு பல்வேறு வாகனத்தில் எழுந்தருளும் கூரத்தாழ்வான் பல்வேறு முக்கிய வீதி வழியாக உலா வருகிறார்.
இதில், மூன்றாம் நாள் உற்சவமான நேற்று முன்தினம், காலை பல்லக்கிலும், இரவு மங்களகிரி வாகனத்திலும் எழுந்தருளி உலா வந்தார்.
இன்று காலை திருப்பல்லக்கிலும், இரவு சூரிய பிரபையிலும் வீதியுலா வருகிறார். வரும் 30ல் காலை தேரோட்டம் நடக்கிறது. மஹோத்ஸவத்திற்கான ஏற்பாட்டை அறங்காவலர், நிர்வாக அறங்காவலர், உற்சவ நிர்வாகிகள், உபயதாரர்கள் செய்துள்ளனர்.

