ADDED : ஜன 26, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:சோமங்கலம் சுந்தரராஜ பெருமாள் கோவில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக உற்சவ விழா நேற்று நடந்தது.
குன்றத்துார் அருகே, சோமங்கலம் கிராமத்தில் 951 ஆண்டுகள் பழமையான சவுந்தரவல்லி தாயார் சமேத சுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
சிதிலமடைந்து இருந்த இக்கோவில் புனரமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு, தை மாதம் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
இந்நிலையில், நேற்று, கும்பாபிஷேக தின முதலாம் ஆண்டு உற்சவ விழா நடந்தது. காலை 9:30 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது.
இதை தொடர்ந்து மாலை 7:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

