/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாரியம்மன் கோவிலில் மே 4ல் கும்பாபிஷேகம்
/
மாரியம்மன் கோவிலில் மே 4ல் கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 26, 2025 07:01 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், பூசிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது பாவாசாகிப்பேட்டை கிராமம். இக்கிராமத்தில், அப்பகுதியினர் முன்னோர் காலந்தொட்டு வழிபடும் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது.
பாவாசாகிப்பேட்டை மற்றும் பூசிவாக்கம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சிறிய வடிலிலான இக்கோவிலை விரிவுபடுத்தி கட்டமைக்க அப்பகுதியினர் தீர்மானித்தனர். அதன்படி, பழைய கோவிலை அப்புறப்படுத்தி பாலாலயம் செய்ததை தொடர்ந்து, நன்கொடை வசூல் வாயிலாக, மண்டபத்துடன்கூடிய கோபுர வடிவிலான கோவில் கட்டுமானப் பணி சில ஆண்டுளகாக நடைபெற்று வந்தது.
கோவில் திருப்பணி முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, வரும் மே 4ம் தேதி மகா கும்பிபிஷேகம் விழா நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

