/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தாமரை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
/
தாமரை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 11, 2025 01:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூரம்,:கூரம் கிராமத்தில் உள்ள தாமரை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த, கூரம் கிராமத்தில், தாமரை விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலை பெரிய அளவில் கட்ட கிராமத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, பல்வேறு திருப்பணிகளுடன் கோவில் கட்டுமானப் பணி சமீபத்தில் முடிந்தது.
கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம், காலை 9:30 மணிக்கு கிராம தேவதை வழிபாடு, விக்னேஸ்வர பூஜை மற்றும் பல்வேறு ஹோமங்கள் நடந்தன.
நேற்று, காலை 10:45 மணிக்கு, கோவில் ராஜகோபுர கலசத்திற்கும், தொடர்ந்து மூலவருக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.