/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருமாகரலீஸ்வரர் கோவிலில் வரும் 12ல் கும்பாபிஷேகம்
/
திருமாகரலீஸ்வரர் கோவிலில் வரும் 12ல் கும்பாபிஷேகம்
திருமாகரலீஸ்வரர் கோவிலில் வரும் 12ல் கும்பாபிஷேகம்
திருமாகரலீஸ்வரர் கோவிலில் வரும் 12ல் கும்பாபிஷேகம்
ADDED : நவ 30, 2024 07:46 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, மாகரல் கிராமத்தில், திருபுவன நாயகி உடனுறை திருமாகரலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, உபயதாரர்கள் மற்றும் ஆணையர் பொது நல நிதியில் இருந்து, ராஜகோபுரம், பரிவார சன்னிதிகளான விநாயகர், ஆறுமுக சுவாமி, கஜருத சுப்பிரமணியசுவாமி, பைரவர் உள்ளிட்ட சன்னிதிகள், மூலவர், தாயார் விமானம், பரிவார மூர்த்தி சன்னிதி, ராஜகோபுரம், சுற்றுச்சுவர், முன் மண்டபம், கொடிமரம் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
கும்பாபிஷேகத்தையொட்டி வரும் 10ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மஹாலஷ்மி, நவக்கிரக பூஜை உள்ளிட்டவை நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை துவங்குகிறது.
டிச., 12ம் தேதி, அதிகாலை 4:30 மணிக்கு கலசங்கள் புறப்பாடும், தொடர்ந்து ராஜகோபுரம், விமானம், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி வேதவிற்பன்னர்கள் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கின்றனர்.
காலை 7:30 மணிக்கு மஹா அபிஷேகமும், தொடர்ந்து மஹா தீபாராதனையும், மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7:00 மணிக்கு பஞ்சமூர்த்தி வீதியுலாவும் நடைபெறுகிறது.