/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீரட்டீஸ்வரர் கோவிலில் வரும் 10ல் கும்பாபிஷேகம்
/
வீரட்டீஸ்வரர் கோவிலில் வரும் 10ல் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 04, 2025 07:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை:குன்றத்துார் அருகே படப்பை ஊராட்சி, கீழ்படப்பை கிராமத்தில் பழமையான வீரட்டீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் நுழைவாயிலில், புதிதாக ஐந்து நிலை ராஜகோபுரம் அமைத்து புனரமைக்கப்பட்டது.
இதையடுத்து, கோவிலின் கும்பாபிஷேக விழா, கடந்த 2ம் தேதி கிராம தேவை வழிபாடுடன் துவங்கியது. பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு வரும் 10ம் தேதி காலை 9:00 -10:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.