/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆதிலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
/
ஆதிலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : செப் 14, 2025 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:ஆதவப்பாக்கம் ஆதிலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது.
உத்திரமேரூர் ஒன்றியம், ஆதவப்பாக்கத்தில் ஆதவனநாயகி சமேத ஆதிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. புதிதாக கட்டப்பட்ட இக்கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.
முன்னதாக, காலை 6:00 மணிக்கு கணபதி பூஜை, கோ பூஜை நடந்தது. காலை 9:00 மணிக்கு, யாக சாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட கலசநீரை, மூலவரான ஆதவனநாயகி சமேத ஆதிலிங்கேஸ்வரர் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.