/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி நகரீஸ்வரர் கோவிலில் வரும் 21ல் கும்பாபிஷேகம்
/
காஞ்சி நகரீஸ்வரர் கோவிலில் வரும் 21ல் கும்பாபிஷேகம்
காஞ்சி நகரீஸ்வரர் கோவிலில் வரும் 21ல் கும்பாபிஷேகம்
காஞ்சி நகரீஸ்வரர் கோவிலில் வரும் 21ல் கும்பாபிஷேகம்
ADDED : அக் 10, 2024 12:19 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கிழக்கு ராஜ வீதி, பேருந்து நிலையம் அருகில, நகரீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை பராமரப்பில் உள்ள இக்கோவில் பல்வேறு திருப்பணிகளுடன் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தையொட்டி வரும் 18ம் தேதி, காலை 9:30 மணிக்கு கணபதி பூஜை, லஷ்மி பூஜை, கோ பூஜை நடக்கிறது.
வரும் 19ம் தேதி, காலை 8:00 மணிக்கு நவக்கிரஹ ஹோமம், தனபூஜை, சாஸ்த்ரா ஹோமமம், யாகசாலை நிர்மானம் உள்ளிட்டவை நடக்கிறது.
வரும் 21ம் தேதி, காலை 4:50 மணிக்கு கலச புறப்பாடும், 5:00 மணிக்கு விமானத்திற்கும், 5:25 மணிக்கு மூலஸ்தானம் மற்றும் பரிவாரங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு மஹா அபிஷேகம் நடக்கிறது.