/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எல்லம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
/
எல்லம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : ஜன 31, 2025 08:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த ஊத்துக்காடு கிராமத்தில், எல்லம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் கணபதி பூஜை, மாலை 5:00 மணிக்கு பிரவேச பலி பூஜை நடந்தது.
நேற்று காலை 9:00 மணிக்கு சாந்தி ஹோமம், மாலை 5:00 மணிக்கு முதல் கால பூஜை நடந்தது. இன்று இரண்டாம் கால பூஜை, மாலை 5:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜை நடைபெற உள்ளன.
நாளை காலை 8:00 மணிக்கு நான்காம் கால பூஜையும், காலை 9:00 - 10:30 மணிக்குள் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.