/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இளையனார்வேலுார் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
/
இளையனார்வேலுார் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : டிச 03, 2024 09:51 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், இளையனார்வேலுாரில் பழமையான பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் உபயதாரர்கள் வாயிலாக கோவிலில் ராஜகோபுரம், மஹா மண்டபம், உற்சவர் மண்டபம், சுற்றுச்சுவர், நவக்கிரஹ சன்னிதி உள்ளிட்ட பல்வேறு திருப்பணி செய்யப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 1ம் தேதி காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவக்கிரஹ ஹோமம் நடந்தது.
நாளை காலை 7:00 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை, காலை 7:35 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசம் புறப்பாடும், தொடர்ந்து 8:30 மணிக்கு ராஜகோபுரம் விமானம், பாலசுப்பிரமணியசுவாமி, பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
பகல் 12:00 மஹா அபிஷேகமும், மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாண உற்வசமும், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.