/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போக்குவரத்து மேம்பாட்டு பகுதிகளாக 5 வழித்தடத்தை தேர்வு செய்தது 'கும்டா'
/
போக்குவரத்து மேம்பாட்டு பகுதிகளாக 5 வழித்தடத்தை தேர்வு செய்தது 'கும்டா'
போக்குவரத்து மேம்பாட்டு பகுதிகளாக 5 வழித்தடத்தை தேர்வு செய்தது 'கும்டா'
போக்குவரத்து மேம்பாட்டு பகுதிகளாக 5 வழித்தடத்தை தேர்வு செய்தது 'கும்டா'
ADDED : ஜன 03, 2026 05:21 AM
சென்னை: புறநகர் மின்சார ரயில்கள், மேம்பால ரயில் சேவை செயல்பாட்டில் உள்ள ஐந்து வழித்தடங்கள், போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டு பகுதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பகுதியில், தளபரப்பு குறியீடு அதிகரிப்பு, சாலை மேம்பாடு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சென்னை பெருநகரில், மெட்ரோ ரயில், புறநகர் மின்சார ரயில், மேம்பால ரயில், மாநகர போக்குவரத்து வழித்தடங்கள் சார்ந்த பகுதிகளை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக, அண்ணா சாலையில், ஓமந்துாரார் அரசினர் தோட்டம் சந்திப்பு முதல் கிண்டி கத்திப்பாரா சந்திப்பு வரையும், பழைய மாமல்லபுரம் சாலையில், எஸ்.ஆர்.பி., டூல்ஸ் முதல் சோழிங்கநல்லுார் வரை என, இரண்டு வழித்தடங்கள், போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டு பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, சாலைகளை மேம்படுத்துவதோடு, மக்கள் அதிகம் குடியேற வழிவகை செய்யப்பட உள்ளது. இந்த பகுதிகளுக்காக, உள்ளூர் பகுதி வளர்ச்சி திட்டம் தயாரிக்கும் பணிகள், சி.எம்.டி.ஏ., வாயிலாக நடந்து வருகிறது.
இந்நிலையில், புறநகர் மின்சார ரயில் சேவை, மேம்பால ரயில் சேவை உள்ள வழித்தடங்கள் சிறப்பு கவனம் பெற்றுள்ளன.
இதில், 114 கி.மீ., தொலைவுக்கு உட்பட்ட, ஐந்து வழித்தடங்களை போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பகுதிகளில் மக்கள் அதிகம் குடியேறுவதை ஊக்கப்படுத்தும் வகையில், எப்.எஸ்.ஐ., எனப்படும் தளபரப்பு குறியீட்டை அதிகரிப்பது, நடை பாதைகள் மேம்பாடு, பேருந்து போக்குவரத்தை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என, போக்குவரத்து குழுமமான கும்டா அதிகாரிகள், அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.

