ADDED : பிப் 15, 2025 07:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, நீரடி கிராமத்தை சேர்ந்தவர் வாசு, 66. இவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட, குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, நேற்று முன்தினம் கடையில் சோதனை செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த 10 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். வாசுவை உத்திரமேரூர் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.