ADDED : பிப் 02, 2024 10:18 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், திம்மையன்பேட்டை ஊராட்சி, வன்னியப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 45. இவர், கருக்குப்பேட்டை பஜார் வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
இவர், நேற்று காலை 11:00 மணிக்கு, ஏகனாம்பேட்டையில் சாலையை கடந்து மளிகை கடைக்கு செல்ல முயன்ற போது, காஞ்சிபுரத்தில் இருந்து, வாலாஜாபாத் நோக்கி வந்த லாரி, ரவி மீது மோதியது. இதில், படுகாயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அவரது உறவினர்கள், ஏகனாம்பேட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜாபாத் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து வாலாஜாபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

