/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாய் வசதி இல்லாததால் வெள்ளம் சூழும் அபாயம்
/
கால்வாய் வசதி இல்லாததால் வெள்ளம் சூழும் அபாயம்
ADDED : ஜன 17, 2025 09:29 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது நாய்க்கன்குப்பம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பிரதான சாலையின் இருபுறமும் 100க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி வசிக்கின்றனர். இந்த சாலையோரங்களில் சிறு அளவிலான துார்ந்த கால்வாய் உள்ளது.
மழை நேரங்களில், சாலைகளில் வழியும் தண்ணீர் வெளியேற கால்வாய் வசதி இல்லாததால், சாலையோர குடியிருப்புகளை சூழந்துக் கொள்ளும் நிலை உள்ளது. அச்சமயங்களில், நாய்க்கன்குப்பம் கிராமவாசிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், கால்வாயில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.
எனவே, நாய்க்கன்குப்பம் பிரதான சாலை தெருவில், இருபுறமும் மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.