/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏரிக்கரை மணல் மூட்டைகளால் சீரமைப்பு
/
ஏரிக்கரை மணல் மூட்டைகளால் சீரமைப்பு
ADDED : டிச 10, 2024 07:00 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகேயுள்ள அமரம்பேடு ஊராட்சியில் கொளத்துார் ஏரி உள்ளது. நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, 150 ஏக்கர் பரப்பளவு உடையது.
இந்த ஏரியின் கரைப்பகுதி, கடந்த வாரம் பெய்த மழையால் சேதமடைந்தது. கரைப்பகுதியில் உள்ள மணல் படிப்படியாக சரிந்து, கரைகள் வலுவிழந்து காணப்பட்டன. ஏரி உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்படும் என, கிராமவாசிகள் அச்சம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், 100க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை கொண்டு சென்று, பலமிழந்த ஏரி கரையில் அடுக்கி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பருவமழை முடிந்த பின், இந்த ஏரியின் கரைகள் முழுமையாக பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.