/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் நாளை லட்ச தீப விழா
/
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் நாளை லட்ச தீப விழா
ADDED : டிச 07, 2024 07:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அடுத்த திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், கார்த்திகை மூன்றாவது சோமவார தினத்தை முன்னிட்டு, 108 சங்காபிஷேகம் மற்றும் கோவிலை சுற்றிலும், லட்ச தீபம் ஏற்றப்படுவது வழக்கமாக உள்ளது.
நடப்பாண்டு, நான்காவது கார்திகை சோமவார தினத்தை முன்னிட்டு, நாளை மாலை 4:30 மணிக்கு சிறப்பு யாகம், மாலை 5:30 மணிக்கு சங்காபிஷேகம் மற்றும் லட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.