/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நில பிரச்னை: கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயன்றவரால் சலசலப்பு
/
நில பிரச்னை: கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயன்றவரால் சலசலப்பு
நில பிரச்னை: கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயன்றவரால் சலசலப்பு
நில பிரச்னை: கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயன்றவரால் சலசலப்பு
ADDED : செப் 30, 2025 01:40 AM

காஞ்சிபுரம்;நில பிரச்னை தொடர்பாக, காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில் நேற்று தீக்குளிக்க ஒருவர் முயற்சி செய்தார்.
காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.
இதில், வேலைவாய்ப்பு, ஆக்கிரமிப்பு, பட்டா, பட்டா திருத்தம், ரேஷன் அட்டை, உதவித்தொகை என பல வகையான கோரிக்கை தொடர்பாக, 446 பேர் நேற்று மனு அளித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
இந்நிலையில், கூட்டரங்கு வெளியே, பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க ஒருவர் முயன்றார். போலீசார் உடனே, பெட்ரோல் கேனை அவரிடம் இருந்து பறித்து, தலையில் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.
விசாரணையில், விப்பேடு கிராமத்தைச் சேர்ந்த ஜான்போஸ்கோ, 53, என்பது தெரிய வந்தது.
மேலும், 'தனக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை உறவினர்கள் அபகரித்து கொண்டனர்.
இதுதொடர்பாக, வருவாய் அதிகாரிகளிடம் மனு அளித்தும், நீண்ட காலமாக நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தீக்குளிக்க முயன்றேன்' என, ஜான்போஸ்கோ கூறினார்.
போலீசார் அவரை மீட்டு சமாதானம் செய்து, வருவாய் துறை அதிகாரிகளிடம் அழைத்து சென்றனர். நில பிரச்னை தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி, அதிகாரிகள் அவரை அனுப்பி வைத்தனர்.
கடந்த மாதம் வரை, மனு கொடுக்க வருவோரை போலீசார், சோதனை செய்த பிறகே அனுப்பி வைத்தனர். இந்த நடைமுறை ஒரு மாதமாக கைவிடப்பட்டதாலும், பாதுகாப்பு குறைபாடு காரணமாகவும், கலெக்டர் அலுவலக வளாகத்தில், தீக்குளிப்பு சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.