/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நில அளவையர்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
நில அளவையர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : டிச 10, 2024 08:35 AM
காஞ்சிபுரம் : சிறப்பு திட்டங்கள் மூலம் பெறப்படும் மனுக்கள் மற்றும் பணிகளுக்கு கால நிர்ணயம் வழங்காமல் பணிச்சுமை அதிகரிப்பது, ஆய்வு என்ற பெயரில் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை கைவிடுவது உள்ளிட்டவற்றை நிறைவேற்ற வேண்டும் என, நில அளவை துறை ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், நாமக்கலில் நடைபெற்ற சங்க செயற்குழு கூட்ட முடிவின்படி, அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நில அளவையர்கள் ஒருநாள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 தாலுகா அலுவலகங்களிலும், நில அளவையர்கள் உள்ளிருப்பு போராட்டம் நேற்று நடத்தினர். தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற, ஒரு நாள் தற்செயல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

