sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவது அதிகரிப்பு 4 ஆண்டுகளில் ரூ.1,203 கோடியாக உயர்வு

/

கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவது அதிகரிப்பு 4 ஆண்டுகளில் ரூ.1,203 கோடியாக உயர்வு

கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவது அதிகரிப்பு 4 ஆண்டுகளில் ரூ.1,203 கோடியாக உயர்வு

கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவது அதிகரிப்பு 4 ஆண்டுகளில் ரூ.1,203 கோடியாக உயர்வு


ADDED : ஜன 30, 2025 12:22 AM

Google News

ADDED : ஜன 30, 2025 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி, 52 காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், 53 தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், ஏழு நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், மூன்று ஊரக வளர்ச்சி கடன் சங்கங்கள், இரண்டு நகர கூட்டுறவு வங்கிகள், 23 பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள் என, 141 கூட்டுறவு அமைப்புகள் இயங்கி வருகின்றன.

இந்த கடன் சங்கங்களின் வாயிலாக, காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகள், மகளிர் குழுவினர், தனிநபர் ஆகியோருக்கு வங்கி கடன் வழங்கப்படுகிறது.

இதுதவிர, பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கங்களின் வாயிலாக கடனுதவிகளும் வழங்கப்படுகின்றன. இந்த கடனுதவி வழங்குவதற்கு, ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதில், 80 சதவீதம் மட்டுமே கூட்டுறவு துறை எட்ட முடிகிறது. அதேசமயம், ஆண்டுதோறும் வழங்கப்படும் கூட்டுறவு கடன் சங்கங்களின் கடனுதவி தொகை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, கடந்த 2021 - -22ம் நிதியாண்டில், 656.02 கோடி ரூபாய் வழங்கப்பட்ட கடன் தொகை, நடப்பாண்டில், 1,203.65 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கூட்டுறவு கடன் சங்கங்களின் வாயிலாக கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தினால், கடன் பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என, கடன்பெறுவோர் தெரிவித்தனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு துறை அதிகாரி கூறியதாவது:

கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கிகளின் வாயிலாக, ஆண்டுதோறும் குறிப்பிட்ட இலக்கு நிர்ணயம் செய்து, கடனுதவி அளிக்க ஒப்புதல் வழங்கப்படுகிறது.

கடன் கேட்டு விண்ணப்பிக்கும் சில பயனாளிகளின் ஆவணங்களை சரிபார்க்கும் போது, பலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது. இதனால், இலக்கு எட்ட முடிவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டுறவு துறையில் வழங்கப்பட்ட கடன் விபரம்

நிதியாண்டு இலக்கு(கோடியில்) கடன் வழங்கிய தொகை(கோடியில்)2021 - -22 1,035.90 656.022022- - 23 1,227.19 973.53 2023 - -24 1,459.83 1,108.642024- - 25 - -- 1,203.65



நடப்பாண்டு கடன் பெற்றவர்கள் விபரம்

கடன் விபரம் கடன் பெற்றோர் எண்ணிக்கை தொகை (கோடியில்)பயிர் சாகுபடி 8,488 63.60கால்நடை வளர்ப்பு 3,720 20.82குறுகிய கால கடன் 200 1.11நகை கடன் 97,766 823.34வீட்டு கடன் 17 1.27வீடு புதுப்பிப்பு கடன் 230 17.54உரக்கடன் 922 7.32மகளிர் சுய உதவிக்குழுக்கள் 801 71.84வணிக கடன் 1,636 5.62பணிபுரியும் மகளிர் கடன் 74 1.66தொழில் செய்யும் மகளிர் கடன் 192 1.00மாற்றுத்திறனாளிகள் கடன் 342 1.65உற்பத்தி கடன் 45 2.42கல்வி கடன் 14 0.14கூட்டுறவு பணியாளர் கடன் 1,877 182.37 பிற கடன் 333 1.95மொத்தம் 1,16,657 1,203.65








      Dinamalar
      Follow us