sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் ரூ.6 கோடியில் நுாலக கட்டடம் விரைவில்...அமைகிறது!:3 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட பணிகளுக்கு தீர்வு

/

காஞ்சியில் ரூ.6 கோடியில் நுாலக கட்டடம் விரைவில்...அமைகிறது!:3 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட பணிகளுக்கு தீர்வு

காஞ்சியில் ரூ.6 கோடியில் நுாலக கட்டடம் விரைவில்...அமைகிறது!:3 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட பணிகளுக்கு தீர்வு

காஞ்சியில் ரூ.6 கோடியில் நுாலக கட்டடம் விரைவில்...அமைகிறது!:3 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட பணிகளுக்கு தீர்வு


ADDED : டிச 08, 2024 07:41 PM

Google News

ADDED : டிச 08, 2024 07:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிந்து, ஐந்து ஆண்டுகளான நிலையில், காஞ்சிபுரத்திற்கு என தனியாக மைய நுாலகம் கட்டப்படும் என, நுாலகத்துறை அறிவித்தது. அறிவிப்பு வெளியாகி மூன்று ஆண்டுகளான நிலையில், இடம் தேர்வு, கட்டட அனுமதி போன்றவைக்கு காலதாமதம் ஆன நிலையில், 6 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு, மைய நுாலக கட்டடம் கட்டுவதற்கான பணிகள் துவங்கியுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, பொது நுாலகத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட மைய நுாலகம், செங்கல்பட்டில் இயங்கி வருகிறது. மாவட்டம் பிரிவதற்கு முன்பாகவே பல ஆண்டுகளாக செங்கல்பட்டிலேயே மைய நுாலகம், மாவட்ட நுாலக அலுவலகம் போன்றவை இயங்கி வருகிறது.

இந்த கட்டடத்தில் மாவட்ட நுாலக அலுவலர், நுாலகர்கள், உதவியாளர்கள் என, பல்வேறு பணியிடங்கள் உள்ளன. இங்குள்ள மைய நுாலகத்தில் பல்வேறு வசதிகளுடன் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களும் உள்ளன.

இந்த மைய நுாலக கட்டடம், 2019ல் மாவட்டம் பிரிந்ததற்கு பின், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தனியாக ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, பொது நுாலகத் துறை சார்பில், காஞ்சிபுரத்தில் புதிதாக மைய நுாலக கட்டடம் கட்டுவதற்கு, தமிழகத்தின் 2022- - 23 பட்ஜெட்டில், 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

குழந்தைகள் பிரிவு, கணினி வசதி, பொதுத்தேர்வுக்கு தயார் செய்ய தனி பிரிவு, வாசகர்கள் நாளிதழ் படிக்க தனிப்பிரிவு என, அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம், இந்த நிதியில் கட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், நுாலகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் விவகாரத்தில், காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் இழுத்தடித்து வந்ததால், மைய நுாலக கட்டடம் அமைப்பதில், மூன்று ஆண்டுகளாகவே சிக்கல் நிலவியது.

வையாவூர் அருகே, மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தை மைய நுாலகம் கட்ட வழங்க வேண்டும் என, நுாலகத் துறை கேட்டிருந்ததது.

ஆனால், அந்த நிலத்தின் மதிப்பு கணக்கிடப்பட்டு, நுாலகத் துறை 1 கோடி ரூபாயை மாநகராட்சி நிர்வாகத்துக்கு தர வேண்டும் என, கடந்த 2022ல் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், நிலத்துக்கு ஈடாக பணம் ஏதும் கொடுக்க விரும்பாத நுாலகத் துறை, மாவட்ட நிர்வாகத்தை, 2023ல் மீண்டும் அணுகியது.

வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, வருவாய் துறைக்கு சொந்தமான இடம் ஏதும் உள்ளதா என, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர்.

அவ்வாறு ஆய்வு செய்ததில், காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தின் அருகில், சுற்றுலா மாளிகை பின்புறம், வருவாய் துறைக்கு சொந்தமான இடம் உள்ளது என தெரியவந்தது.

இதையடுத்து, மைய நுாலகம் கட்டுவதற்கு, 30 சென்ட் நிலத்தை, அப்போதைய கலெக்டராக இருந்த ஆர்த்தி ஒதுக்கீடு செய்து அளித்தார்.

இந்நிலையில், கலெக்டர் அலுவலகம் அருகிலேயே நுாலகம் கட்டுவதற்கு இடம் கிடைத்தது, நுாலகத் துறை அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நுாலக கட்டடம் கட்டுவதற்கான பணிகள் நுாலகத்துறை இயக்குனரகம் மற்றும் பொதுப்பணித்துறை இயக்குனரகம் என, பல்வேறு அரசு துறை அலுவலகங்களில், ஓராண்டாகவே நடந்தன.

நுாலக கட்டடம் வரைபடம், அதற்கான அனுமதி என, ஓராண்டுக்கு மேலாக இப்பணிகள் இழுத்தடிக்கப்பட்டு வந்தன. இதனால், காஞ்சிபுரத்தில் மைய நுாலக கட்டடம் எப்போது கட்டப்படும் என, வாசகர்கள், பொதுமக்கள், மாணவர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், தரைத்தளத்துடன் கூடிய இரண்டு அடுக்கு கொண்ட மைய நுாலகம் கட்டுவதற்கான டெண்டர் பணிகளை, காஞ்சிபுரம் பொதுப்பணித் துறையினர் துவங்கியுள்ளனர்.

டெண்டர் பணிகள் முடிந்தவுடன், சுற்றுலா மாளிகை அருகே அடுத்த சில நாட்களில் பணிகளை துவக்கப்படும் என, நுாலகத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், மைய நுாலகம் கட்டுவதற்காக இழுத்தடிக்கப்பட்ட பிரச்னை தீர்ந்தது.

இதுகுறித்து, நுாலகத்துறை அதிகாரி கூறியதாவது:

மைய நுாலகம் கட்டுவதற்கான இடம் மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது. புதிய நுாலக கட்டடம், 6 கோடி ரூபாய் மதிப்பில், தரைத்தளத்துடன் கூடிய இரண்டு அடுக்கு கட்டடமாக அமையும். இரண்டு அடுக்கு கொண்டதாக கட்டப்பட உள்ளதால், லிப்ட் வசதி அமைக்க கேட்டுள்ளோம்.

மைய நுாலகத்தில், அதிகாரிகளுக்கான அறைகள், நுாலகர்கள், ஊழியர்களுக்கான இட வசதிகள் அமையும். பல்லாயிரம் புத்தகங்கள் கொண்ட நுாலகமாக இது கட்டப்படும்.

வைபை, சிறுவர்கள் பகுதி, கணினி வசதி, போட்டி தேர்வர்கள் பகுதி என, அனைத்து வசதிகள் கொண்ட நுாலகமாக இது அமைய உள்ளது. கலெக்டர் அலுவலகம் அருகிலேயே நுாலகம் கட்டப்படுவதால், அனைவரும் இங்கு வந்து செல்ல எளிதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us