காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், பல்பொருள் அங்காடியை, கூட்டுறவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
இதையடுத்து, வையாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், மினி வேன். நான்கு பேருக்கு விற்பனையாளர் பணிக்குரிய பணி ஆணை, 194 நபர்களுக்கு, 1.92 கோடி ரூபாய் கடனுதவிகளை வழங்கினார்.
மேலும், சதாவரம் பகுதியில், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மற்றும் நியாயவிலை கடை ஆய்வு செய்யப்பட்டது.
ஆற்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், வேப்பம் புண்ணாக்கு விற்பனை, மாகரல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கணினி மயமாக்கும் பணி, சிறுகாவேரிப்பாக்கம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு ஆய்வு செய்யப்பட்டன.
இதில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ உட்பட பலர் பங்கேற்றனர்.