/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாதில் இறைச்சிகூடம் அமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
/
வாலாஜாபாதில் இறைச்சிகூடம் அமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
வாலாஜாபாதில் இறைச்சிகூடம் அமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
வாலாஜாபாதில் இறைச்சிகூடம் அமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
ADDED : ஜன 25, 2025 09:05 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியில், 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கன்றனர். வாலாஜாபாத் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்நதோர், தினமும் வாலாஜாபாத் வந்து, வீட்டு உபயோகத்திற்கான பல்வேறு பொருட்களை கடைகளில் வாங்கி செல்கின்றனர்.
வாலாஜாபாதில் வணிக வளாகம் இருந்தும் காய்கறி, பூ மாலை, மளிகை பொருட்கள் மற்றும் இறைச்சி உள்ளிட்டவை ஒரே இடத்தில் பெற முடியாமல், பேருந்து நிலைய பகுதிக்கும், ராஜவீதிக்குமாக அலைந்து திரியும் நிலை உள்ளது.
இதனால், நேரம் விரயம் உள்ளிட்ட பல பிரச்னைகளால் பகுதிவாசிகள் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக கறி, மீன் போன்ற இறைச்சி கடைகள் பஜார் தெருவில், அங்கொன்றும், இங்கொன்றுமாக சாலையோரங்களில் உள்ளன.
பேருந்து நிலைய பகுதிக்கு வருவோர், இறைச்சி வாங்க வேண்டுமெனில், அரை கி.மீ., துாரத்திலான பஜார் வீதிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், நடந்து செல்லும் பயணியர் சிரமப்படுகின்றனர்.
எனவே, வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே இறைச்சிகூடம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.

