/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏகாம்பரர் உற்சவர் சன்னிதிகளில் தரமற்ற பணியால் பூட்டுகள் சேதம்
/
ஏகாம்பரர் உற்சவர் சன்னிதிகளில் தரமற்ற பணியால் பூட்டுகள் சேதம்
ஏகாம்பரர் உற்சவர் சன்னிதிகளில் தரமற்ற பணியால் பூட்டுகள் சேதம்
ஏகாம்பரர் உற்சவர் சன்னிதிகளில் தரமற்ற பணியால் பூட்டுகள் சேதம்
ADDED : மார் 31, 2025 01:37 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிவில் உள்ள உற்சவர் சன்னிதி மற்றும் ஏலவார்குழலி அம்மன் சன்னிதி முன் அமைக்கப்பட்டிருந்த மரக்கதவுகள் அகற்றப்பட்டு புதிதாக இரும்பு சட்டங்களால் செய்யப்பட்ட கதவு அமைக்கப்பட்டுள்ளது.
இரு கதவுகளும் உட்புறமாக பூட்டும் வகையிலும் மற்றும் வெளிப்புறமாக பூட்டும் வகையில் பூட்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதில், உற்சவர் சன்னதியில் உட்புறமாக பூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பூட்டு லாக்கின் இரும்பு வளைவு பகுதியை முறையாக 'வெல்டிங்' செய்யாததால் இரண்டே நாளில் உடைந்து விட்டது.
இதனால், உற்சவர் சன்னிதியின் உட்புறமாக கதவை பூட்ட முடியாமல் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
ஏலவார்குழலி அம்மன் சன்னிதி கதவில் அமைக்கப்பட்டுள்ள உட்புற பூட்டு கழன்று வந்துவிட்டது. இதனால், ஏலவார்குழலி அம்மன் சன்னதியிலும் உட்புறமாக பூட்ட முடியாத நிலையில் உள்ளது.
உற்சவர் சன்னிதி மற்றும் ஏலவார்குழலி சன்னிதியிலும் ஏற்கெனவே இருந்த பழைய மரக்கதவுகள் நன்றாகத்தான் இருந்தது. அது பழுதடைந்து இருந்தாலும், அதை சீர் செய்து பயன்படுத்தி இருக்கலாம்.
ஆனால், புதிதாக இரும்பு சட்டத்தால் செய்யப்பட்ட கதவில் பொருத்தப்பட்ட உட்புற பூட்டை சரியாக வெல்டிங் செய்யாததால், தரமற்ற பணியால் அவை உடைந்துள்ளது.
இரு சன்னிதிகளிலும் உள்ள கதவுகளை உட்புறமாக பூட்டாமல் வெளிப்புற பூட்டுகளால் மட்டும் பூட்டுவதால், பாதுகாப்பு கேள்விக்குறியாகும் சூழல் உள்ளது.
எனவே, இரு சன்னிதிகளிலும், உட்புறமாக பூட்டும் வகையில், பூட்டுகளை சீரமைக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.