/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாமந்தி மாலை அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்
/
சாமந்தி மாலை அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்
ADDED : அக் 15, 2025 12:16 AM

ஸ்ரீபெரும்புதுார்:வல்லக்கோட்டை முருகன் கோவிலில், புரட்டாசி மாத செவ்வாய் கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருபாளிக்கிறார்.
இக்கோவில், புரட்டாசி மாத நான்காவது செவ்வாய் கிழமையான நேற்று, காலை 5:00 மணிக்கு சன்னிதி திறக்கப்பட்டு, மூலவர் முன் கோ பூஜை நடந்தது.
தொடந்து, காலை 6:00 மணி முதல், 11: மணி வரை, சிறப்பு அபிஷேகம் நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதேபோல், சஷ்டி மண்டபத்தில் உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சாமந்தி மலர் மாலை அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்தேவராஜ் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினார்கள் செய்திருந்தனர்.