/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வடகிழக்கு பருவமழை எதிரொலி கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்
/
வடகிழக்கு பருவமழை எதிரொலி கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்
வடகிழக்கு பருவமழை எதிரொலி கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்
வடகிழக்கு பருவமழை எதிரொலி கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்
ADDED : அக் 14, 2025 11:50 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் பிரதான சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் துவக்கி உள்ளனர்.
வடகிழக்கு பருவமழையையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை துார்வாரி சீரமைக்க காஞ்சிபுரம் ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி நிர்வாகம், நீர்வளம், பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை இரு நாட்களில் துவங்க உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
இதையடுத்து, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரும் பணி நேற்று துவங்கியது.
காஞ்சிபுரம் உபகோட்டம், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில், காஞ்சிபுரம் நகரில் உள்ள காமராஜர் வீதி, கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, நெல்லுக்காரத் தெரு, உள்ளிட்ட நகரில் உள்ள பிரதான சாலையோரம் மழைநீர் வடிகால்வாய்களை துார்வாரும் பணி துவக்கப்பட்டுள்ளது என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.