/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் கம்பியில் சிக்கிய லாரி மின் ஊழியர்கள் சீரமைப்பு
/
மின் கம்பியில் சிக்கிய லாரி மின் ஊழியர்கள் சீரமைப்பு
மின் கம்பியில் சிக்கிய லாரி மின் ஊழியர்கள் சீரமைப்பு
மின் கம்பியில் சிக்கிய லாரி மின் ஊழியர்கள் சீரமைப்பு
ADDED : பிப் 17, 2025 01:51 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் பெரிய காலனியில், வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான மின் கம்பங்களில் மின் ஒயர்கள் தாழ்வாக தொங்கிய நிலையில் இருந்தது.
இந்நிலையில், நேற்று காலை அத்தெரு வழியாக சென்ற கனரக லாரியில், தாழ்வாக தொங்கிய மின் கம்பிகள் சிக்கி கொண்டன.
இதை லாரி ஓட்டுனர் கவனிக்காமல் லாரி இயக்கியதால், மின் கம்பிகள் மேலும் தாழ்ந்து அப்பகுதியில் உள்ள இரண்டு மின் கம்பங்கள் சாய்வான நிலைக்குள்ளானது.
இதுகுறித்து, அப்பகுதியினர் உடனடியாக பழையசீவரம் மின் பகிர்மான் அலுவலகத்திற்கு அளித்த தகலலையடுத்து, மின்தடை செய்யப்பட்டு விபத்து அபாயம் தவிர்க்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த மின் ஊழியர்கள், சாய்ந்த நிலையிலான மின்கம்பங்களை சரி செய்து, தாழ்வான மின் கம்பிகளை உயர்த்திக்கட்டி பராமரிப்பு பணி மேற்கொண்டு நிலைமையை சீராக்கினர்.