ADDED : நவ 15, 2024 01:00 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கணி கண்டீஸ்வரர் கோவில் தெரு, நாகலுத்து மேடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் புகையிலை பொருட்களை விற்பதாக, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, குமார்,44, சுரேஷ்,44, பிரகாஷ்,36, ஆகிய மூன்று பேரையும் விஷ்ணு இரு நாட்கள் முன்பாக காஞ்சி போலீசார் கைது செய்தனர்.
அவர்களை தொடர்ந்து, சின்ன காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ்,53, பன்னீர்செல்வம்,50, புவியரசன்,34, சரவணன்,40 என, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களை பிடித்து போலீசார் விசாரித்ததில், முருகானந்தம் என்ற மொத்த லாட்டரி வியாபாரி பற்றி தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த முருகானந்தம், 55. என்பவரை, மேற்கு மாம்பலத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கும்பலிடம் இருந்து, 8.5 லட்ச ரூபாய் ரொக்க பணம், 15,000 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.