/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காதல் தோல்வியா? 15 வது மாடியில் இருந்து குதித்து இன்ஜினியர் தற்கொலை
/
காதல் தோல்வியா? 15 வது மாடியில் இருந்து குதித்து இன்ஜினியர் தற்கொலை
காதல் தோல்வியா? 15 வது மாடியில் இருந்து குதித்து இன்ஜினியர் தற்கொலை
காதல் தோல்வியா? 15 வது மாடியில் இருந்து குதித்து இன்ஜினியர் தற்கொலை
ADDED : டிச 13, 2024 02:13 AM

ஸ்ரீபெரும்புதுார்:புதுச்சேரி முருங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ், 29, இவர் ஆவடியில் வீடு எடுத்து தங்கி, ஒரகடம் அருகே, மேட்டுபாளையம் பகுதியில் உள்ள கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ‛அட்மேச்' என்ற தனியார் நிறுவனத்தில் குவாலிட்டி இன்ஜினியராக வேலை செய்து வந்தார்.
சமீபமாக நாகராஜ் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று காலை, ஒரகடம் அருகே மாத்துாரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ள தன் நண்பர் கார்த்திகை சந்திக்க சென்றார்.
பின் மதியம் 1:00 மணியளவில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் 15வது மாடியில் இருந்து கீழே குதித்து, நாகராஜ் தற்கொலை செய்து கொண்டார். ஒரகடம் போலீசார் உடலை மீட்டு, ஸ்ரீபெரும்பதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், நாகராஜ் காதலித்து வந்த பெண்ணின் பெற்றோர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். நேற்று காலை, கார்த்திக் தன்னுடன் பணிப்புரியும் கம்பெனி அதிகாரி சுப்பிரமணி என்பவரை, நண்பரின் அடுக்குமாடி குடியிருப்பிற்கு அழைத்து வந்து, காதலியின் தாயிடம் மொபைல்போனில் திருமணம் தொடர்பாக பேசி உள்ளார்.
தன் பெண்ணை நாகராஜூக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என, காதலியின் தாய் தெரிவித்துள்ளார். இதனால், மனமுடைந்த நாகராஜ் 15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

