/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குறைந்த மின்னழுத்த பிரச்னை மல்லிகாபுரத்தில் விவசாயம் பாதிப்பு
/
குறைந்த மின்னழுத்த பிரச்னை மல்லிகாபுரத்தில் விவசாயம் பாதிப்பு
குறைந்த மின்னழுத்த பிரச்னை மல்லிகாபுரத்தில் விவசாயம் பாதிப்பு
குறைந்த மின்னழுத்த பிரச்னை மல்லிகாபுரத்தில் விவசாயம் பாதிப்பு
ADDED : மார் 27, 2025 08:12 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் வட்டம், அங்கம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது மல்லிகாபுரம் கிராமம். இந்த கிராமத்தில், திறந்தவெளி கிணறு மற்றும் ஆழ்த்துளை கிணறுகள் அமைத்து விவசாய நிலங்களுக்கு பாசனம் மேற்கொள்ளப்படுகிறது.
இங்குள்ள விவசாய நிலங்களின் அருகாமையில் இரண்டு மின்மாற்றிகள் அமைத்து அதன் வாயிலாக விவசாய நில மின் மோட்டார்களுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அதே மின்மாற்றிகள் வாயிலாக அப்பகுதி குடியிருப்புகளுக்கும் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், சில மாதங்களாக இப்பகுதி விவசாய நிலங்களுக்கான மின் மோட்டார்களுக்கு குறைந்த மின் அழுத்தம் நிலவுகிறது.
இதனால், மின் மோட்டார் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுது அடைந்து வருவதாகவும், புதிய மின் மோட்டார்கள் வாங்க அதிக தொகை செலவிட வேண்டி உள்ளதாகவும் விவசாயிகள் புலம்புகின்றனர்.
மேலும், சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு சரியான நேரத்தில் பாசனம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
எனவே, மல்லிகாபுரத்தில் விவசாய நில மின் மோட்டார்களுக்கு என, தனியாக மின்மாற்றி ஏற்படுத்தி, குறைந்த மின் அழுத்தம் பிரச்னையை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.