/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மதிய உணவு வழங்கும் சேவை மருத்துவமனையில் துவக்கம்
/
மதிய உணவு வழங்கும் சேவை மருத்துவமனையில் துவக்கம்
மதிய உணவு வழங்கும் சேவை மருத்துவமனையில் துவக்கம்
மதிய உணவு வழங்கும் சேவை மருத்துவமனையில் துவக்கம்
ADDED : நவ 12, 2025 10:47 PM
காஞ்சிபுரம்: விதைகள் தன்னார்வ அமைப்பின் 'அன்னம் பகிர்ந்திடு' திட்டத்தின் மூலம், காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவமனையில் நாள்தோறும் மதிய உணவு வழங்கும் சேவை துவக்க விழா நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் காரப்பேட்டையில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உடனாளர்களுக்கு மதிய உணவு வழங்கும் வகையில், விதைகள் தன்னார்வ அமைப்பின் 'அன்னம் பகிர்ந்திடு' திட்டத்தின் மூலம், நாள்தோறும் மதிய உணவு வழங்கும் திட்டத்தின் துவக்க விழா நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் வியாபாரிகள் சங்க மாவட்ட செயலர் வெங்கடேசன், காஞ்சி அன்ன சத்திரம் மோகன் திட்டத்தை துவக்கி வைத்தனர்.
நாள்தோறும் மதிய உணவு வழங்கும் இத்திட்டத்தின் கீழ் உணவு வழங்க விரும்புவோர் 88702 81261 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, விதைகள் தன்னார்வ அமைப்பினர் பசுமை சரண் தெரிவித்துள்ளார்.

