/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
/
விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
ADDED : நவ 12, 2025 10:47 PM
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில், பைக் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியத்தில், தனியார் நிறுவன ஊழியர் பலியானர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரிராமன், 40; ஸ்ரீபெரும்புதுாரில் வாடகைக்கு தங்கி, மாம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில் மாம்பாக்கத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் சென்றார். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் அருகே, வந்த போது, அதே திசையில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மேதியது.
இதில், நிலைத்தடுமாறி விழுந்த, அரிராமனுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவரை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

