/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாதில் துாய்மை பணிக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கல்
/
வாலாஜாபாதில் துாய்மை பணிக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கல்
வாலாஜாபாதில் துாய்மை பணிக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கல்
வாலாஜாபாதில் துாய்மை பணிக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கல்
ADDED : நவ 12, 2025 10:49 PM

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சியில், துாய்மை பணி மேற்கொள்ள பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 200க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.
இத்தெருக்களில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறுகின்ற குப்பை கழிவுகளை, பேட்டரி வாகனம் மற்றும் தள்ளு வண்டிகள் வாயிலாக துாய்மை பணியாளர்கள் பெற்று செல்கின்றனர்.
அவ்வாறு சேகரிக்கும் குப்பை கழிவுகள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு மட்காத குப்பை கழிவுகள் மறு சுழற்சி முறைக்கும், மட்கும் குப்பை கழிவுகள் இயற்கை உரம் தயாரித்தல் போன்றவைக்கும் பயன்படுத்தப்படுகிறது.
வாலாஜாபாத் பேரூராட்சியில் குப்பை கழிவுகள் எடுத்து செல்ல பயன்படுத்தும் பேட்டரி வாகனங்கள் போதுமானதாக இல்லாததால் கூடுதலாக வழங்க கோரிக்கை எழுந்தது.
அதன்படி, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 12 லட்சம் ரூபாய் செலவில் 5 பேட்டரி வாகனங்கள் நேற்று வழங்கப்பட்டன.
பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் ஆகியோர் பங்கேற்று பேட்டரி வாகனங்களின் இயக்கத்தை துவக்கி வைத்தனர்.
பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

