/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநில கால்பந்து போட்டி மதுரை அணி சாம்பியன்
/
மாநில கால்பந்து போட்டி மதுரை அணி சாம்பியன்
ADDED : நவ 18, 2025 04:25 AM
சென்னை: திண்டுக்கல்லில், மாநில அளவில் நடந்த கால்பந்து போ ட்டியில், மதுரை மாவட்ட பள்ளி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.
டாக்டர் சேவியர் பிரிட்டோ குழுமம், சென்னை மற்றும் திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கிடையில் 'சேலஞ்சர் கோப்பை' எனப்படும், மாநில அளவிலான கால்பந்து போட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்தது.
இதில், மாநிலத்தின் 12 மாவட்ட அணிகள், நான்கு பிரிவுக ளாக போட்டியிட்டன. போட்டி லீக் கம் நாக் அவுட் முறையில் நடந்தது. லீக் முடிவில் திண்டுக்கல், கோவை, சேலம், மதுரை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அரையிறுதி போட்டியில் அசத்திய மதுரை மற்றும் கோவை மாவட்ட அணிகள், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இறுதிப்போட்டி, நேற்று முன்தினம் மாலை நடந்தது. விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், மதுரை மாவட்ட அமெரிக்கன் பள்ளி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில், கோவை மாவட்டத்தின் பயோனிர் மில்ஸ் பள்ளி அணியை வீழ்த்தி , சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. மூன்றாவது இடத்தை, திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளி அணியும், நான்காவது இடத்தை சேலம் மாவட்ட கிலேசி புரூக் அகாடமி அணியும் கைப்பற்றின.

