/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருவாலீஸ்வரர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
/
திருவாலீஸ்வரர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
ADDED : செப் 05, 2025 01:58 AM

ஆற்பாக்கம்:ஆற்பாக்கம் திருவாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்து, ஆற்பாக்கத்தில் திருநல்லழகி சமேத திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன.
கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 2ம் தேதி, காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது.
நேற்று காலை 9:00 மணிக்கு, வேதவிற்பன்னர்கள் கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். மாலை 4:00 மணிக்கு மஹா அபிஷேகமும், திருக்கல்யாணமும், வீதியுலாவும் நடந்தது.