/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெய்க்குப்பம் அகத்தீஸ்வரர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
/
நெய்க்குப்பம் அகத்தீஸ்வரர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
நெய்க்குப்பம் அகத்தீஸ்வரர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
நெய்க்குப்பம் அகத்தீஸ்வரர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஜூன் 19, 2025 12:54 AM

வாலாஜாபாத்:நெய்க்குப்பம் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடந்தது.
வாலாஜாபாத் ஒன்றியம், அவளூர் மதுரா நெய்க்குப்பம் கிராமத்தில் அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் கட்டடம் பழுதானதை அடுத்து, அதை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக கோவில் கட்ட அப்பகுதியினர் தீர்மானித்தனர்.
அதன்படி, ஆறு மாதங்களுக்கு முன் பாலாலயம் செய்து விமான கோபுரத்துடன்கூடிய கட்டுமானப் பணி துவங்கியது. திருப்பணி முழுமை பெற்றதையடுத்து, நேற்று, காலை 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, நேற்று முன்தினம், விக்னேஸ்வர பூஜை, நவக்கிரஹ ஹோமம், கணபதி ஹோமம், யாகபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
இந்நிலையில், நேற்று, காலை 9:45 மணிக்கு, யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு 10:00 மணிக்கு கணபதி, முருகர், நவக்கிரகம் மற்றும் கோவில் விமான கோபுர கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.