/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கருணாகர பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
/
கருணாகர பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஜன 20, 2025 01:30 AM

குன்றத்துார்:குன்றத்துார் அருகே உள்ள கோவூரில், கருணாகர பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், நன்கொடையாளர்கள் வாயிலாக புதுப்பித்து கட்டப்பட்டது.
இதையடுத்து, கோவிலின் மஹா சம்ரோக் ஷணம் விழா, கடந்த 17ம் தேதி துவங்கியது. பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு, நேற்று கோவில் விமான கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
உத்திரமேரூர்
உத்திரமேரூர் ஒன்றியம் கம்மாளம்பூண்டி கிராமத்தில், பூங்குழலி சமேத ஆதி விஷ்வபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, கடந்த 17-ல் விநாயகர் யாகம், கோ பூஜை, முதற்கால யாக பூஜையுடன் கும்பாபிஷேகம் துவங்கியது.
நேற்று முன்தினம் நினைவு திருமஞ்சனம், திருமுறை விண்ணப்பம், இரண்டாம் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு நாடி சந்தனம், பேரொளி வழிபாடு நடந்தது. பின், 9:15 மணிக்கு விமான கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை செய்யப்பட்டது. இதில், திருவண்ணாமலை யோகி யோகானந்தா சுவாமிகள் பங்கேற்று, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.