ADDED : ஆக 13, 2025 01:57 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களில், மஹா சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜை நேற்று நடந்தது.
மஹா சங்கடஹரசதுர்த்தியையொட்டி, காஞ்சிபுரம், டி.கே.நம்பி தெருவில் உள்ள திருக்கச்சியம்பதி விநாயருக்கு பால், தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகமும், அருகம்புல், மலர் மாலைகளால் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தன.
உக்கம்பெரும்பாக்கம், கூழமந்தல் ஏரிக்கரையில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், நறுமண பொருட்களைக்கொண்டு அபிஷேகம் நடந்தது.
மாலை 3:00 மணிக்கு மேல் கலச பூஜை, கலச அபிஷேகம் நடந்தது.
காஞ்சிபுரம் புதுப்பாளையம் தெரு சித்தி, புத்தி காசி விநாயகர் கோவில், திருக்காலிமேடு செல்வகணபதி, சிந்தாமணி விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.