/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பராமரிப்பு இல்லாத ஏகனாம்பேட்டை குளம்
/
பராமரிப்பு இல்லாத ஏகனாம்பேட்டை குளம்
ADDED : ஏப் 27, 2025 01:42 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அடுத்த, ஏகனாம்பேட்டை திருவாலீஸ்வரர் கோவில் அருகே, பொது குளம் உள்ளது. இந்த பொதுக்குளம், குடியிருப்புகள் மற்றும் காஞ்சிபுரம் - செங்கல்பட்டு கிராம சாலையோரத்தில் உள்ளது.
இந்த குளத்தை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், குளம் பாசி பிடித்த நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக, எருக்கன் செடிகள் அதிகளவில் உள்ளதால், ஆடு, மாடு தண்ணீர் குடிக்க குளத்தில் இறங்கினால், சேற்றில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது.
மேலும், குளத்தில் இருந்து அதிக விஷம் உடைய நாகப்பாம்புகள் குடியிருப்பு பகுதிகளில் நடமாடுவதால், விஷக்கடிக்கு ஆளாக வேண்டி உள்ளது.
எனவே, ஏகனாம்பேட்டை கிராமத்தில் இருக்கும் பாசி பிடித்த குளத்தை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

