/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பராமரிப்பு இல்லாத பொது கழிப்பறை
/
பராமரிப்பு இல்லாத பொது கழிப்பறை
ADDED : நவ 15, 2024 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, பூதேரிப்பண்டை பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, பேரூராட்சி சார்பில், கட்டப்பட்ட பொது கழிப்பறையை அப்பகுதியினர் பயன்படுத்தி வந்தனர்.
கழிப்பறையில் தண்ணீர் தேவைக்காக அமைக்கப்பட்ட மின் மோட்டார் பழுதடைந்து உள்ளது. மேலும், கழிப்பறை கட்டடத்தை சுற்றி செடி, கொடிகள் படர்ந்தும், புதர் மண்டியும் காணப்படுகிறது. எனவே, பொது கழிப்பறையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.