/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டூ - வீலரில் இருந்து தவறி விழுந்தவர் பலி
/
டூ - வீலரில் இருந்து தவறி விழுந்தவர் பலி
ADDED : மே 05, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:உத்திரமேரூர் அடுத்த, நெய்யாடுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி, 38; அலுவலக உதவியாளர். இவர், கடந்த மாதம் 28ம் தேதி, 'ஹோண்டா ஆக்டிவா' வாகனத்தில், வாலாஜாபாதில் இருந்து, நெய்யாடுபாக்கம் கிராமத்திற்கு சென்றார்.
நிலை தடுமாறி விழுந்தவரை, அவ்வழியே சென்றவர்கள் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, நேற்றுமுன்தினம் இரவு அவர் இறந்தார். இந்த விபத்து குறித்து, மாகரல் போலீசார் விசாரிக்கின்றனர்.