ADDED : ஜன 11, 2024 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஓ.பி., குளம் பள்ளத்தெருவில், பல்வேறு திருப்பணிகளுடன் புதுப்பிக்கப்பட்ட வேணுகோபாலசுவாமி பஜனை கோவில் கும்பாபிஷேகம், கடந்த நவ., 24ல் நடந்தது.
தொடர்ந்து, தினமும் கோவிலில் மண்டலாபிஷேக பூஜை நடந்து வந்தது. இதில், மண்டல பூஜை நிறைவு நாளான நேற்று, கோவில் நிர்வாக குழு தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.
இதில், யாகசாலை பூஜையும், விநாயகர் முருகர் மற்றும் வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து மஹாதீப ஆராதனை நடந்தது.