/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
/
மருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : நவ 21, 2024 11:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:உத்திரமேரூர் ஒன்றியம், நெய்யாடுபாக்கம் கிராமத்தில், மரகதவள்ளி சமேத மருந்தீஸ்வர் மற்றும் பட்டாபிராம சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்ட சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டன.
கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 19ம் தேதி, காலை 10:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, தனபூஜை, மஹா கணபதி உள்ளிட்ட ஹோமம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு முதற்கால யாகபூஜை துவங்கியது.
நேற்று, காலை 9:00 மணிக்கு பட்டாமிராமருக்கும், தொடர்ந்து மருந்தீஸ்வரர் மற்றும் பரிவாரங்களுக்கு வேதவிற்பன்னர்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.