/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆடு மேய்க்க சென்ற முதியவர் மாயம்
/
ஆடு மேய்க்க சென்ற முதியவர் மாயம்
ADDED : அக் 26, 2024 07:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர்-, எண்டத்தூர் சாலையில், கோழியாளம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி, 84, என்பவர், தன் வெள்ளாடுகளை, நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். மாலையில் ஆடுகள் மட்டும் வீடு திரும்பிய நிலையில், முதியவர் பொன்னுசாமி இரவாகியும் வீடு திரும்பவில்லை.
அங்குள்ள மேய்ச்சல் பகுதியின் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது பேரன் செல்வம் அளித்த புகாரின்படி, உத்திரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.