/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தைப்பூசத்தை ஒட்டி மருத்துவ முகாம்
/
தைப்பூசத்தை ஒட்டி மருத்துவ முகாம்
ADDED : ஜன 26, 2024 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:தைப்பூச விழாவை ஒட்டி, உத்திரமேரூரில் அனைத்து வியாபாரிகள் சங்கம் ஏற்பாட்டில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவமனை மற்றும் செங்கல்பட்டு ஸ்ரீரங்கா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.
இம்முகாமில், கண் சிகிச்சை, அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, மூட்டு சிறப்பு சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
மேலும், இம்முகாமில் 150க்கும் மேற்பட்டோருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் ஆகியோர் மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர்.

