/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆற்பாக்கம் அரசு பள்ளியில் நாளை மருத்துவ முகாம்
/
ஆற்பாக்கம் அரசு பள்ளியில் நாளை மருத்துவ முகாம்
ADDED : நவ 21, 2025 01:28 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், சிறப்பு மருத்துவ முகாம் ஆற்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாளை காலை 9:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை நடக்கிறது.
இதில், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, மகப்பேறு, இதயம், நரம்பியல், தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம், முடநீக்கியல், நுண்கதிர், நுரையீரல், சர்க்கரை, சித்த மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட உள்ளன.
இம்மருத்துவ முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் ரத்த பரிசோதனை, உப்பின் அளவு, இ.சி.ஜி., எக்கோ, கண், மார்பகம், கருப்பை வாய், வாய் புற்றுநோய் உள்ளிட்ட பரிசோதனை செய்யப்பட்டு, உடனுக்குடன் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், சிறப்பு மருத்துவ நிபுணர்களால் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. மேலும், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு பயனாளிகள் அட்டை வழங்கப்பட உள்ளது. முகாமிற்கு வருவோர் ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

