ADDED : பிப் 16, 2025 08:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை மற்றும் அரிமா சங்கம் காஞ்சிபுரம் சார்பில், திருவள்ளுவர் குருகுலத்தில் உள்ள சிறார் மற்றும் சிறுமியருக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் பருவ வயது விழிப்புணர்வு முகாம் மருத்துவ சங்க தலைவர் டாக்டர் ரவி தலைமையில்நடந்தது.
இதில், அரிமா சங்க தலைவர் டாக்டர் லட்சுமி முன்னிலை வகித்தார். மருத்துவ சங்க செயலர் டாக்டர் முத்துகுமரன், துணைத்தலைவர் டாக்டர் நிஷாப்ரியா ஆகியோர் மாணவியருக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்