/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மெட்ரோவில் வேலை: ரூ. 15 லட்சம் மோசடி காஞ்சியில் சிக்கிய போலி நீதிபதி
/
மெட்ரோவில் வேலை: ரூ. 15 லட்சம் மோசடி காஞ்சியில் சிக்கிய போலி நீதிபதி
மெட்ரோவில் வேலை: ரூ. 15 லட்சம் மோசடி காஞ்சியில் சிக்கிய போலி நீதிபதி
மெட்ரோவில் வேலை: ரூ. 15 லட்சம் மோசடி காஞ்சியில் சிக்கிய போலி நீதிபதி
ADDED : ஏப் 25, 2025 01:36 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட நாகலுாத்து தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யும் தொழில் செய்து வருகிறார்.
சுற்றுலா ஏற்பாடு செய்வதன் மூலமாக, காஞ்சிபுரம், ஒலிமுகமதுபேட்டையைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் மோகன் என்பவருடன் பழகி வந்தார்.
இருவரும் பேசிக்கொள்ளும்போது, தன் மகன் அருணுக்கு வேலை கிடைக்காமல் சிரமமாக இருப்பதாக மோகன் கூறி வந்தார். அப்போது, ராஜேந்திரன் மகன் நீதிபதி என, மோகனுக்கு தெரிந்தது.
இதையடுத்து, ராஜேந்திரன் மகன் அருண்சூர்யா, 23 என்பவரை மோகன் அணுகியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், சிவில் நீதிபதி என, தன் வீட்டில் போர்டு வைத்திருந்ததால், மோகனுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால், தன் மகன் அருணுக்கு வேலை வாங்கி தர முடியுமா என, அருண்சூர்யாவிடம் கேட்டுள்ளார்.
அதற்கு, சென்னை மெட்ரோவில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாகவும், நான் சிபாரிசு செய்தால், வேலை கிடைக்கும் என, அருண்சூர்யா தெரிவித்துள்ளார். வேலை கிடைத்து விடும் என கூறி, மோகன் தரப்பிடம், பல தவணையாக 15 லட்ச ரூபாய் பெற்றுள்ளார்.
ஆனால் வேலை வாங்கி தராமல், அருண்சூர்யா இழுத்தடித்து வந்தார். போனில் அழைத்த மோகனுக்கு சரியான பதில் தெரிவிக்காமலும், பணத்தை திரும்ப வழங்காமலும் இழுத்தடித்த காரணத்தால், விஷ்ணுகாஞ்சி போலீசில் மோகன் புகார் அளித்தார்.
விஷ்ணுகாஞ்சி போலீசார் சென்னையில் இருந்த அருண்சூர்யாவை, நேற்று முன்தினம் பிடித்தனர். விசாரணையில், சட்டப்படிப்பு படித்து விட்டு, வழக்கறிஞர் பயிற்சி பெற்று வந்துள்ளார். ஆனால் நீதிபதி என கூறி, கோவில், அரசு சுற்றுலா மாளிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சலுகைகளை பெற்றது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் நேற்று அருண்சூர்யாவை கைது செய்தனர்.

