/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேடபாளையத்தில் நள்ளிரவில் மழை 6,000 நெல் மூட்டைகள் நனைந்தன
/
வேடபாளையத்தில் நள்ளிரவில் மழை 6,000 நெல் மூட்டைகள் நனைந்தன
வேடபாளையத்தில் நள்ளிரவில் மழை 6,000 நெல் மூட்டைகள் நனைந்தன
வேடபாளையத்தில் நள்ளிரவில் மழை 6,000 நெல் மூட்டைகள் நனைந்தன
ADDED : மே 08, 2025 01:26 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம்,வேடபாளையம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது.
இங்கு, கல்யாணமேடு, காட்டுப்பாக்கம், அம்மையப்பநல்லூர், பங்களாமேடு, பூந்தண்டலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நெல் கொள்முதல் நிலையம், கடந்த 5 ஆண்டுகளாக வேடபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் இயங்கி வந்தது.
தொடர்ந்து, இந்த ஆண்டும் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில், நெல் கொள்முதல் நிலையம் இயங்க, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து, நெல் கொள்முதல் நிலையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு அருகே உள்ள காலியிடத்தில் இயங்கி வருகிறது.
இங்கு, விவசாயிகளுக்கு சொந்தமான 6,000 நெல் மூட்டைகள் மற்றும் நெல் குவியல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேடபாளையம் பகுதியில் திடீரென்று இடியுடன் கூடிய மழை பெய்தது.
அதில், நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. மேலும், நெல் குவியல்களில் மழைநீர் சூழ்ந்து உள்ளதால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.
எனவே, மழையில் நனைந்து சேதமான, நெல் மூட்டைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க, மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.